புற்று நோய் தடுப்பு மருந்துக்களுடன் இலங்கை வந்த இந்திய பிரஜை கைது

இந்தியாவின் பெங்களூரில் இருந்து சட்டவிரோதமான முறையில் புற்று நோய் தடுப்பு மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்  25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் விமானம் மூலம் மருந்துகளை கடத்தி, நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து வந்தவர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுமேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

.