பாதுகாப்பற்ற முறையில் சவப்பெட்டிகளை ஏற்றி சென்ற லொறி

சவப்பெட்டிகளை லொறியில் பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

பண்டாரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள், பண்டாரகம நகரில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது, இந்த லொறியை நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர் .

சோதனையில் சவப்பெட்டிகள் பாதுகாப்பற்ற முறையில் அடுக்கிக் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட வாகன சாரதியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, பாணந்துறை பகுதியிலிருந்து முல்லைத்தீவுக்கு இந்த சவப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது .

இந்த சவப்பெட்டிகள் ஆபத்தான முறையில் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் கீழ் சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்