பாசி பயறு பயன்கள்

பாசி பயறு பயன்கள்

பாசி பயறு பயன்கள்

💢பாசிப்பயறு,பச்சைப்பயிறு வெண்டைக்காய் பயறு அல்லது ஹரா சனா என்றும் அழைக்கப்படுகிறது.இது பருப்பு குடும்பத்தைச் சேர்ந்த சிறிய வகை பச்சை பயறு வகையாகும் இது ஆசிய நாடுகளில் பரவலாக பயிரிடப்படுகிறது. பல உணவு வகைகளில் முக்கிய மூலப் பொருளாக உள்ளது.

💢இது தாவர அடிப்படையிலான புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள்,போலேட், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம் பொட்டாசியம் உட்பட ஆகியவை இவற்றின் வளமான மூலமாகவும். இவற்றில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. இது ஒரு சீரான உணவுக்கு ஆரோக்கியமான கூடுதலாகும்.

பாசிபயறு பயன்கள்

🍀சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊற வைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

🍀பாசிபயறில் காணப்படும் புரதச்சத்தானது இரத்த அழுத்தத்தை உயர்த்தக் கூடிய என்சைம்களின் செயல்பாடுகளைத் தடைசெய்கின்றன. எனவே பாசிபயறினை அடிக்கடி உணவில் சேர்த்து இரத்த அழுத்தத்தைச் சீராக்கலாம்.

🍀உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பாசிப்பயறு மிக சிறந்த உணவு. புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருப்பதால், கலோரிகள் உடம்பில் சேராமல் அதிகப்படியான கொழுப்பு உடம்பில் சேராமல் பார்த்து கொள்ள உதவுகிறது.

🍀பச்சை பாசிப் பயிரில் கணிசமான அளவு நார்ச்சத்து உள்ளது. இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. போதுமான நார்ச்சத்து உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், மலச்சிக்கலின் அபாயத்தைக் குறைப்பதற்கும் பங்களிப்பு செய்கின்றது.

🍀மனத்தக்காளி கீரையோடு பாசிப்பயறையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குண மடையும். பாசிப்பயறை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தம் குணமாகும். பாசிப்பயறை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும்.

🍀கர்ப்பிணிகள் பொதுவாக ஃபோலேட்டுகள் நிறைந்த உணவினை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள். ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு குழந்தையானது குறைபாடுகள் இன்றி பிறக்கவும் வழிவகுக்கிறது. பாசி பயறானது ஃபோலேட்டுகளை அதிகளவு கொண்டுள்ளது.

🍀வயிற்று கோளாறுகளை சரி செய்ய நினைப்பவர்கள் பாசிப்பயிரை வேகவைத்து அந்த தண்ணீரை சூப்பு போல செய்து குடித்தால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

🍀இதில் இருக்கும் தாது உப்புகள் ரத்த சோகையை குணப்படுத்தவும் மற்றும் ஃப்ளோனாய்டுகள், ஆன்டிஆக்சிடன்ட்டுகள் இருப்பதால் புற்றுநோய்களை சரி செய்யவும், புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கவும் உதவுகிறது.

🍀பாசி பயறில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடுத்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள செம்புச்சத்து சருமத்திற்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தை பளபளப்பாக்குகிறது.

🍀பாசிப்பயிரை மாவு போன்று அரைத்து சீயக்காய் போல தலையில் தேய்த்து குளிப்பதன் மூலம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

பாசி பயறு பயன்கள்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்