பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் போது 50 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் செட்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 36 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 15 லட்சம் ரூபா எனவும் கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்