பல்கலைக்கழகங்களுக்கு விண்ணபங்கள் கோரப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும்  இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி WWW.UGC.AC.LK என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பங்களை அனுப்பலாம் என அவர் கூறியுள்ளார்.