பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 கேஸ் சிலிண்டர்களுடன் உரிமையாளர் கைது

கினிகத்தேனை – அம்பகமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸாரும், நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.

12.5 கிலோகிராம் எடைக்கொண்ட 177 கொள்கலன்களும், 5 கிலோகிராம் எடைக்கொண்ட 28 கொள்கலன்களும், 2.5 கிலோகிராம் எடைகொண்ட 25 கொள்கலன்களும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த எரிவாயு கொள்கலன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே இவ்வாறான பதுக்கல் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.