பணக்காரராக ராசிக்கு ஏற்ற வேலை என்ன

பணக்காரராக ராசிக்கு ஏற்ற வேலை என்ன

பணக்காரராக ராசிக்கு ஏற்ற வேலை என்ன

💥வாழ்க்கையில் உச்சம் தொட, கல்வி, தொழில் வேலை என தங்கள் இருக்கும் துறையில் சிறப்பாக வழங்க வேண்டும்.இன்றைய போட்டி மிகுந்த காலகட்டத்தில், சாதனைகளைப் படைக்க கடின உழைப்பு அவசியம். அதோடு அதிர்ஷ்டமும் கை கொடுக்க வேண்டும்.நமக்கு ஏற்ற பாடத்தை தேர்வு செய்து படிப்பதன் மூலம், நமக்கு ஏற்ற தொழிலை வேலையை தேர்ந்தெடுப்பதன் மூலம், வெற்றிகளை எளிதாக அடையலாம்.அதற்கு ராசிகளுக்கு ஏற்ற தொழிலை தேர்வு செய்தால், நிச்சயம் பலன் அளிக்கும்.

மேஷம்

🔺மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய் ஆற்றல், தைரியம் ஆகியவற்றை வழங்குவார். இதனால் இவர்கள் மேலாண்மை தொடர்பான கல்வியை பயில்வது வெற்றிகளை கொடுக்கும்.அதோடு உடல் வலிமை பெற்றவர்களாக இருக்கும் இவர்கள், காவல்துறை, ராணுவம், பாதுகாப்பு படை பிரிவு, விளையாட்டு ஆகியவற்றில் சேர்ந்தால் வெற்றிகளை பெறலாம்.

ரிஷபம்

🔺ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். இவர் செல்வம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையை வழங்கும் கிரகம். ரிஷப ராசியினர், கலைத்துறைகளில் பிரகாசிக்கலாம். திரைப்பட தயாரிப்பு அல்லது இயக்கம், நடிப்பு போன்ற துறைகளை தேர்ந்தெடுக்கலாம்.

🔺வெள்ளை பொருட்கள் தொடர்பான வணிகம் செய்வதும் வெற்றியை கொடுக்கும். அழகு நிலையங்கள், அழகு கலை போன்ற துறைகளிலும் இவர்கள் வெற்றிகளை குவிக்கலாம். மருத்துவ துறையிலும் சாதனைகள் படைக்கும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்

🔺மிதுன ராசிக்கு அதிபதி புதன். இதனால் அறிவுத்திறன் அவரின் மீதுமாக இருக்கும். பத்திரிகை துறையில் சேர்ந்தால், வெற்றிகளை குவிக்கலாம்.இந்த ராசியினர் வழக்கறிஞர், விற்பனை துறை, மார்க்கெட்டிங், பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சிறப்பாக செயல்பட முடியும்.

கடகம்

🔺கடக ராசிக்கு அதிபதி சந்திரன். மனித மனத்தை ஆளக்கூடிய திறன் படைத்தவர் சந்திரன். இந்த ராசியினர், இசை கலை, நாடகம், நடிப்பு, ஆடல் பாடல் போன்ற துறைகளை தேர்ந்தெடுத்தால், காலம் பிரகாசமாக இருக்கும்.

🔺கலை உணர்வு மிக்க இவர்கள் ஆடை வடிவமைப்பு, கவிதை எழுதுதல் போன்ற துறைகளையும் தேர்ந்தெடுக்கலாம். ஏற்றுமதி இறக்குமதி தொழில், பயண முகவர், தொழில் ஆலோசகர் போன்ற பணிகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

சிம்மம்

🔺சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். இவர்கள் மேலாண்மை, மருத்துவம், அரசியல் போன்ற துறைகளில் எளிதாக புகழ் பெறுவார்கள்.இவர்களுக்கு ஆர்வம் இருக்கும் வாதத்தின் மிக்க இவர்கள் வழக்கறிஞர்களாகவும், பேச்சாளர்களாகவும் புகழின் உச்சத்தை எளிதாக அடைவார்கள்.

கன்னி

🔺கன்னி ராசிக்கு அதிபதி புதன். அறிவுத்திறன் மிக்க இவர்கள், இருப்பார்கள். எழுத்து துறை, எடிட்டிங் பணி, கல்பித்துறை ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள்.கணக்காளர், வங்கி அதிகாரி போன்ற பணிகளும் இவர்களுக்கு ஏற்ற வேலையாக இருக்கும்.

துலாம்

🔺துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். எனவே இந்த ராசியினர், புகைப்பட வல்லுநர், நிருபர், நடிப்பு, அழகு கலை நிபுணர், வழக்கறிஞர், இசை கலைஞர், போன்றவற்றில் சிறந்து வழங்குவார்கள். மருத்துவ பணியிலும் இவர்கள் வெற்றி பெறலாம்.

விருச்சிகம்

🔺விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய். எனவே இவர்கள், விளையாட்டு வீரர்களாக, பாதுகாப்பு பணியாளர்களாக, ராணுவ அதிகாரிகளாக பணியாற்றினால், வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை எளிதில் அடையலாம்.

🔺விளையாட்டு துறையும் இவர்களுக்கு ஏற்ற துறையாக இருக்கும். மருத்துவத்துறையில் இவர்கள் அறுவை சிகிச்சை நிபுணர்களாக, எந்த மருத்துவராக பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு.

தனுசு

🔺தனுசு ராசிக்கு அதிபதி குரு. இந்நிலையில், இவர்கள் நீதித்துறையை தேர்ந்தெடுத்தால் வெற்றியை எளிதாக கட்டலாம்.சட்ட வல்லுனராக, நீதிபதியாக, பேராசிரியர்களாக, சிறந்த நிர்வாகிகளாக இவர்கள் சிறப்பாக பணியை அற்றவர். கணினி துறையிலும் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

மகரம்

🔺மகர ராசிக்கு அதிபதி சனிபகவான். இவர்கள் மொழிபெயர்ப்பு துறை, மேலாண்மை துறை, புகைப்படத்துறை ஆகியவற்றை தேர்ந்தெடுப்பது வெற்றியை கொடுக்கும்.மேலும் தொழில்நுட்ப வல்லுனராக கணினி துறையில் சிறந்து விளங்கும் வாய்ப்பு உண்டு. மேலாண்மை துறையிலும் இவர்கள் வெற்றி பெறலாம்.

கும்பம்

🔺கும்ப ராசிக்கு அதிபதி சனிபகவான். எனவே இவர்கள் சட்டத்துறை, கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர், அனிமேஷன், பொருளாதார நிபுணர், மோட்டார் வாகனத்துறை போன்ற பணிகளில் எளிதாக வெற்றியை பெறுவார்கள்.

மீனம்

🔺மீன ராசிக்கு அதிபதி குரு பகவான். எனவே இவர்கள் கல்வித் துறை, தங்கம் தொடர்பான வணிகம், நிர்வாகம், மருத்துவம், அயல் நாட்டு தூதரக அதிகாரி போன்ற துறைகளில் எளிதாக வெற்றி பெறலாம்.

பணக்காரராக ராசிக்கு ஏற்ற வேலை என்ன

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்