நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளம் –  பாஜுராவின் டஹாகோட்டில் ஒரே இரவில்  4.8 மற்றும் 5.9 ரிக்டர் அளவுகோலில்  இரண்டு நிலநடுக்கங்கள்  ஏற்பட்டது.

முதல் நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11:58 மணிக்கு 4.9 ரிக்டர் அளவிலும், நள்ளிரவு 1:30 மணிக்கு 5.9 ரிக்டர் அளவிலும் பதிவானதாக நேபாளத்தின் சுர்கெட் மாவட்டத்தில் உள்ள நில அதிர்வு மையத்தின் அதிகாரி ராஜேஷ் ஷர்மா ANI செய்திக்கு தெரிவித்தார்.

இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்

மேற்கு நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காத்மண்டுவில் இருந்து மேற்கே 140 கி.மீ தொலைவில் உள்ள கோர்கா மாவட்டத்தின் பலுவா பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 6:50 மணிக்கு தாக்கியதாக காத்மண்டுவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

4.1 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம்  லாம்ஜங் மற்றும் தன்ஹு மாவட்டங்களிலும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சேதம் அல்லது உயிர்சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.