நெஞ்சு சளி இருமல் குணமாக

நெஞ்சு சளி இருமல் குணமாக

நெஞ்சு சளி இருமல் குணமாக

🟤நெஞ்சு சளியால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலருக்கு காலநிலை கொஞ்சம் மாறினாலும் கூட சளி பிடித்துக் கொள்ளும். இருமல் வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக இரவு படுத்தால் வாய் ஓயாமல் இருமல் வந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் தூக்கம் கெட்டு போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுக்கும் நெஞ்சுச் சளியும் இருமலும் நீங்கி விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதுவும் இயற்கையான வைத்தியத்தால் அந்த இயற்கை வைத்தியத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

  1. பூண்டிலுள்ள அலிசின் என்ற கலவை நமது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது. உங்கள் டயட்டில் பூண்டை சேர்த்துக் கொண்டால் இருமல், சளி பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
  2. கீரைகள் போன்ற பச்சை இலை காய்கறிகளில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் வைட்டமின், மினரல், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்றவை அதிகளவு உள்ளது. அதேப்போல் கீரைகளில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் வைட்டமின் சி, வைட்டமின் இ போன்ற ஊட்டசத்துகள் அதிகமுள்ளது.
  3. அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் இஞ்சியில் உள்ளதால், நமது நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பதற்கு உதவி செய்கிறது. இருமல், சளி போன்ற சுவாச சம்மந்தமான நோய் அறிகுறிகளை குணப்படுத்த இஞ்சி மிகவும் உதவியாக இருக்கிறது. நீங்கள் சமைக்கும் உணவு, டீ, சூப் அகியவற்றில் இஞ்சியை பயன்படுத்தலாம்.
  4. இஞ்சி சாறு, துளசி சாறு இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து இதில் தேன் கலந்து குடித்தால் நெஞ்சு சளி, இருமல் நீங்கும்.
  5. சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும்.
  6. ஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கிய பின்னர், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும், இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து சூடு ஆறிய பின்னர் குடித்தால் பலனை பெறலாம்.
  7. ஒரு கைப்பிடி அருகம்புல்லை அரைத்து சாறெடுத்து அதை குடித்து வர, சளித்தொல்லை குறையும்.
  8. சீரகம் மற்றும் மிளகை வெறும் வாணலியில் போட்டு வறுத்துவிட்டு, தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும், இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்துவந்தால் கிருமித்தொற்றுகள் நீங்கி வறட்டு இருமல் சரியாகும்.
  9. துளசிச் சாறு, தூதுவளை சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை 200 மி.லி. அளவுக்கு தினமும் குடித்து வர சளி, இருமல், நெஞ்சு கபம், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் சரியாகும்.
  10. கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும்.  ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன்  தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும்.  15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.

நெஞ்சு சளி இருமல் குணமாக

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்