நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சொகுசு கார் விபத்து

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் பயணித்த சொகுசு கார் நேற்று புதன்கிழமை மாலை விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் நால்வர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டி – அக்குரணை பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு வருகைத்தந்து நானுஓயா டெஸ்போட் வழியாக கொழும்பு நோக்கி சென்ற சொகுசு கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடது பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டு கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்