நுவரெலியாவில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

-நுவரெலியாவில் நிருபர்-

நுவரெலியா – உடப்புசல்லாவ குறுக்கு வீதியில், சமூர்த்தி வங்கிக்கு அருகில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா மாநகரசபையில் பணியாற்றும், நுவரெலியா ஹாவாஎலிய பிரதேசத்தினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான, செல்வராஜ் நடராஜ் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா – உடப்புசல்லாவ குறுக்கு வீதியில், சமூர்த்தி வங்கிக்கு அருகில் பயணித்த மோட்டார் சைக்கிள், விபத்துக்குள்ளாகியதை அவதானித்தவர்கள் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசத்தை மீட்டனர் எனினும் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை காணவில்லை.

நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்து, அவர்கள் அப்பகுதியில் நீண்ட நேரம் தேடியும் யாரும் கிடைக்காததால், மோட்டார் சைக்கிளை மாத்திரம் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

பின்னர் விபத்து இடம்பெற்ற இடத்தில், இன்று சனிக்கிழமை, உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதல் நடத்திய போது, காணாமல் போன நபர் நுவரெலியா கிரகறி வாவிக்குச் செல்லும் தலகல ஓயா ஆற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின், சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும், என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க