நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் மழையினால் மின் உற்பத்தி நிலையங்கiளை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

73 பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களில் 9 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாகவும் மேலும் 20 நீர்த்தேக்கங்கள் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் நீர்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார்.