நீரிழிவு நோய் அறிகுறிகள்

நீரிழிவு நோய் அறிகுறிகள்

நீரிழிவு நோய் அறிகுறிகள்

🟤முதியவர்களிடையே காணப்படும் நாள்பட்ட நோய்களில் ஒன்றுநீரிழிவு நோய். 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 33மூ பேருக்கு நீரிழிவு நோய் இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இளைஞர்கள் மத்தியிலும் நீரிழிவுநோய் ஒரு பொதுவான நிலையாகிவிட்டது. நீரிழிவு என்பது ஒரு நபரின் உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது அல்லது இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகும்போது உருவாகலாம். இந்த இரண்டின் கலவையும் நோய்க்குக் காரணமாக இருக்கலாம். உடல் இன்சுலினில் சிக்கல் இருப்பதாக ஒருவர் உணரும்போது உடல், ரத்த ஓட்டத்தில் அதிக குளுக்கோஸ் சேரும். இது உடல் ஆரோக்கியத்தில் சிக்கலை உருவாக்கும்.

🟤நீரிழிவு நோயின் மிகவும் பொதுவான வடிவம் டைப் 2. குறிப்பாக, வயதானவர்களிடையே இது அதிகம் காணப்படுகிறது. ரத்தச் சர்க்கரைக் குறைவு, இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட நீரிழிவு தொடர்பான சிக்கல்கள் வயதானவர்களுக்கு வருவதற்கு அதிக சாத்தியம் உண்டு. நீரிழிவு நோயை தொடக்கத்திலேயே கண்காணித்து அடையாளம் காண வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

🔸பல் ஈறுகளில் வலி, வீக்கம் அல்லது சிவத்தல் ஆகியவை நீரிழிவு நோயின் அறிகுறியாகும். நோயெதிர்ப்பு மண்டலத்தையும் நீரிழிவு பாதிக்கலாம். இது ஈறு தொற்றுஇ பற்களுக்கு பிடிமானம் தரும் எலும்புகளில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

🔸ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இரத்த நாளங்களை பாதிப்படைய செய்து இதயத்திலும் பாதிப்பை உண்டாக்குகிறது. அதிகபட்சமாக மாரடைப்பு போன்ற உயிருக்கே ஆபத்தான பிரச்சனைகளும் இதனால் உண்டாகக்கூடும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகளினால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர்.

🔸நீரிழிவு நோயின் போது, சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை அகற்ற கடினமாக உழைக்கிறது. ஆனால் இறுதியில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், சிறுநீரகங்கள் தொடர்ந்து சீராக செயல்படாது, மேலும் அவை அதிகப்படியான சர்க்கரையை சிறுநீரில் அனுமதிக்கின்றன. இந்த அதிகப்படியான சர்க்கரை அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கிறது.

🔸ஒருவர் அதிக சர்க்கரை தேவையை உணர்வதோ அல்லது அதிகம் சாப்பிட வேண்டும் என்பதுபோல் உணர்வதோ நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக, பெரியவர்களுக்கு. ஒரு நபர் வழக்கத்தைவிட அதிக பசியை உணர்ந்தால், அது பாலிஃபேஜியாவாக இருக்கலாம். இது அதிக சர்க்கரை உணவுகளை உட்கொள்வதற்கு வழிவகுக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவையும் அதிகரிக்கிறது.

🔸ஒருவருக்கு உடல் எடை குறைந்திருந்தால், அது நீரிழிவு நோயின் விளைவாக இருக்கலாம். ஒரு நபர் அதிக சிறுநீர் கழிப்பதால் அதிகப்படி திரவத்தை உடல் இழக்க நேரிடும். இதன் விளைவாக எடை குறையும்.

🔸சரும அழற்சி இருந்தால் தான் சருமத்தில் அரிப்பை உண்டு செய்யும் என்பது கிடையாது. சருமம் நீரிழப்பால் நாளடைவில் வறண்ட சருமமாக மாறும் இது அரிப்பை ஏற்படுத்துவதாக இருக்கலாம். அவ்வபோது சருமத்தை சொறியும் உணர்வை நீங்கள் பெற்றால் அது நீரிழிவு நோய் எச்சரிக்கையாக இருக்கலாம்.

🔸உயர் ரத்த சர்க்கரை அளவுகள் விழி லென்ஸில் இருந்து திரவங்களை வெளியேற்றுவதால், கண்களை கவனம்குவித்துப் பார்ப்பது கடினமாக இருப்பதால், ஒருவருக்கு பார்வை மங்கலாகிறது. நீரிழிவு நோய்க்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், விழித்திரைக்கு பின்னால் புதிய ரத்த நாளங்கள் உருவாகி, ஏற்கனவே உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்தும். இது பகுதி அல்லது முழுமையான பார்வை இழப்புக்கும் வழிவகுக்கும்.

🔸இந்த காரணி குளுக்கோஸை ஒழுங்காக உடைக்க உடலின் இயலாமையுடன் நெருக்கமாக தொடர்புடையது ஆகும். உடலில் எரிபொருள் (குளுக்கோஸ்) வேகமாக வெளியேறி, மேலும் அதனை வேண்டி உடல் ஏங்கும்போது, நீரிழிவு நோயாளி சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்கிறார். மேலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும், நீரிழப்பு ஏற்படுவதும் இந்த சோர்வையும் பலவீனத்தையும் கூட்டுகிறது.

🔸ஒரு நீரிழிவு நோயாளியின் இரத்த நாளங்களும் நரம்புகளும் மெதுவாக சேதமடைவதால், உடலில் இரத்த ஓட்டம் மெல்ல பலவீனமடைகிறது. இதனால்தான் நீரிழிவு நோயாளிக்கு உடலில் ஏற்படும் காயங்கள் குணமடைய நேரம் எடுக்கும்.

🔸கழுத்து, அக்குள், இடுப்பு ஆகியவற்றின் மடிப்புகளில் உள்ள தோல் பகுதியில் ஏதேனும் திட்டுகள் உள்ளதா என கவனிக்க வேண்டியது அவசியம். மேற்கூறிய பகுதிகளில் கருமையான, வெல்வெட் போன்ற திட்டுகள் இருந்தால், அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்

நீரிழிவு நோய் அறிகுறிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்