நீரில் மூழ்கி 16 வயது இளைஞர் பலி

-பதுளை நிருபர்-

நீரில் மூழ்கி 16 வயதுடைய இளைஞர் நேற்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொப்டன் 19 ஆம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்த 16 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூன்று இளைஞர்கள் நீராடுவதற்காக ஹொப்டன் பழைய தொழிற்சாலை மலைப் பகுதியில் அமைந்துள்ள நீரோடை ஒன்றில் நீராடிக் கொண்டிருந்த வேளை குறித்த இளைஞன் நீரோடையில் உள்ள குழி ஒன்றினுள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது ஹொப்டன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்