நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

நுவரெலியாவில் உள்ள அம்பேவளை ஓயாவில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹங்குரனங்கெத்த பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பேவளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நபரொருவருடன் அம்பேவளை ஓயாவிற்கு நீராடச் சென்றுள்ள நிலையில் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குரன்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்