நீண்டகால பிரச்சினைக்கான தீர்வை காணும் நோக்கில் காணி உறுதிகளை ஜனாதிபதி வழங்கி வைக்கிறார்

-யாழ் நிருபர்-

 

20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1286 பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரங்கள் வழங்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக 372 பயனாளிகளுக்கான காணி உறுதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்,

நாட்டு மக்கள் மிக நீண்டகாலமாக எதிர்நோக்கிய காணிக்கான உரிமம் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளமை சிறப்பான விடயம், என தெரிவித்தார்

ஜனாதிபதியின் கனவு திட்டமான இந்த அழகான திட்டத்தின் பயனாளர்கள் இதன் பயனை தமது அடுத்த சந்ததியினருக்கும் கொண்டு செல்லும் வகையில் செயற்பட வேண்டும், என தெரிவித்தார்

அத்துடன், எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வடக்கு மாகாணத்திலுள்ள 5000 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளதாகவும் , தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்