நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயம்

மஹவெவ, கொஸ்வாடிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும், காரில் இருந்த மூவர் மாரவில ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் அனர்த்த நிவாரண அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹலவத்தையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் கொஸ்வாடியா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே பாரிய மரம் ஒன்று கார் மீது விழுந்துள்ள இந்த சோகம் சம்பவம் நிகந்துள்ளது.

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் ஏழு வயது மகள் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று பெண்கள் மரம் விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்