நிரந்தரமாக உடல் எடை குறைய

நிரந்தரமாக உடல் எடை குறைய

நிரந்தரமாக உடல் எடை குறைய

⚫🔵ஆரம்ப காலத்தில் உடல் எடை குறைப்பது என்பது எளிதான ஒன்றாக அமைந்தது. ஆனால் நிரந்தரமாக உடல் எடையை குறைப்பது என்பது கடினமான ஒன்றாக அமைந்தது. இந்நிலையில் உடல் எடையினை குறைக்க எவ்வாறான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

🎈உடல் எடையை குறைக்க உதவும் முக்கியமான பொருளில் முதன்மையானது மிளகு தூள். உங்களுக்கு பிடித்த காய்கறிகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் மிளகு தூள் சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை விரைவாக குறைந்து விடும்.

🎈தினமும் வெதுவெதுப்பான மாட்டுப் பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

🎈தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர, உடல் எடை குறையும்.

🎈.தினமும் காலையில் மோரில் கேரட்டை அரைத்து அதில் சேர்த்து குடித்து வந்தால், உடல் எடை குறைவதை அவதானிக்க முடியும்.

🎈மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு தினமும் காலையில் 10 கருவேப்பிலை இலைகளை உண்டு வர உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

🎈ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் துளசியை பேஸ்ட் செய்து சேர்த்து, அத்துடன் தேன் கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு வெளியேற்றப்படும்.

🎈இஞ்சி நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது. சிறிதளவு இஞ்சியை நசுக்கி அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தினமும் குடித்தால் உடல் பருமனை குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

🎈உணவில் அடிகடி முட்டைகோஸை சேர்த்துக் கொள்ளவதன் மூலம் உடல் எடை குறையும்.

🎈தினமும் கொள்ளினை உணவில் சேர்த்து வருபவர்களின் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும். தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறையும்.

🎈புடலங்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் அது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.

🎈பப்பாளிக்காயை பருப்புடன் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் மாற்றம் ஏற்படும்.

🎈மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு தினமும் காலையில் தக்காளி சாப்பிட்டு வர கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு கொழுப்புகள் குறைந்து உடல் எடை குறைக்க வழிவகுக்கிறது.

🎈உடல் எடையைக் குறைக்க, வெந்தயப் பொடியை எடுத்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சாப்பிட்டால் நல்ல பயன் கிடைக்கும்.

🎈உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால், 2-3 மாதங்களுக்கு தினமும் இரவில் காய்கறி சூப் செய்து குடித்து வாருங்கள். இதனால் உங்கள் உடலில் கொழுப்புக்கள் சேர்வது கட்டுப்படுத்தப்படும்.

🎈உளுந்து, கம்பு, தினை, ஆளி விதைஉள்ளிட்ட தானியங்களை வறுத்துச் சாப்பிடுவதால், உடல் எடை குறைகிறது

நிரந்தரமாக உடல் எடை குறைய

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்