நாட்டின் நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை

நாட்டில் தற்போது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று சனிக்கிழமை பல கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

அதன் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் முதல் அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மற்றுமொரு பேச்சுவார்த்தை நிதி, வலுசக்தி மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி – ஊடகப்பிரிவு