நாடாளுமன்ற கட்டடம் புனரமைக்க நடவடிக்கை

நாடாளுமன்ற கட்டடத்தை புனரமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடம் சேதமடைந்துள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் இன்று ஞாயிற்று கிழமை காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்