
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைப்பு
தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணிகள் கப்பல் சேவையானது நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு வாராந்தம் 6 நாட்கள் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தநிலையில், கோடைகால விடுமுறையை முன்னிட்டு பயணக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, இதுவரையில் இருவழி பயணக் கட்டணமாக 8,500 இந்திய ரூபாய் அறவிடப்பட்ட நிலையில், குறித்த கட்டணம் தற்போது 8,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்