நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

தற்போது நாட்டில் அனைவரும் வெப்பமான காலநிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

“நமது தேசத்திற்கும் கிரகத்திற்கும் காலநிலை நடவடிக்கை” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் இரண்டையும் கையாளும் ஒரு சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.

இது மத்திய சுற்றாடல் அதிகார சபையை தொடர்ந்து இயக்கும் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மையத்தையும் உள்ளடக்கும். இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.” என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்