நடைபயணத்தில் இலங்கை சிறுமி படைத்த சாதனை

இலங்கையைச் சேர்ந்த 8 வயது மாணவி ஜி. ஹிருகி பினோத்யா, இந்தியாவில் பராமரிக்கப்பட்டு வரும் புகழ்பெற்ற சோழன் உலக சாதனைப் புத்தகத்தில், குறைந்த நேரத்தில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து உலகின் இளைய பெண் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.

களனி பிலப்பிட்டிய அதிபர் கல்லூரியில் 3ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி, கடந்த 18ஆம் திகதி ஒன்றரை மணி நேரத்தில் 10 கிலோமீட்டர் நடந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்நிகழ்வில் சோழன் புக் ஒஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இலங்கைக் கிளையின் உப தலைவர் இந்திரநாத் பெரேரா மற்றும் சோழன் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் ஸ்ரீ நாகவாணி ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் குறித்த சிறுமி தான் சிறுவயதில் இருந்தே தந்தையுடன் நடந்து செல்வது தான் இந்த உலக சாதனைக்கு காரணம் என தெரிவித்தார்.