நடிகை நமீதா விவாகரத்து?

நடிகை நமீதா எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார். மேலும் இவர் விஜய்காந்த், விஜய், அஜித்குமார், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு அவரது நீண்ட நாள் நண்பரான வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டு, இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இதனால் சினிமாவை விட்டு விலகி, குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தினார். அண்மைக் காலமாக நமீதாவும் அவரது கணவர் வீரேந்திர சௌத்ரியும் பிரிய இருப்பதாக சில வதந்திகள் பரவி வந்தன.

மேலும் இது குறித்து நடிகை நமீதா கூறியதாவது,

“நானும் என் கணவரும் பிரியப்போவதாக பரவிய வதந்திகள் குறித்து சில நாட்களுக்கு முன்பு தான் எனக்கே தெரியும். இதைப் பார்த்து நானும் என் கணவரும் சிரித்தோம்.

உடனே நானும் என் கணவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டேன். அப்போதும்கூட இந்த வதந்திகள் நிற்பதாக தெரியவில்லை. இதுபோல் பல வதந்திகளை சினிமாவில் பார்த்துவிட்டேன். அதனால் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை” எனக் கூறியுள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்