தொலைத்தொடர்பு கம்பங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

செட்டிக்குளம் மன்னார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கம்பங்களை காட்டு யானைகள் அடித்து நொருக்கி சேதப்படுத்திய சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் மன்னார் வீதியில் பறையனாளங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு இரண்டு கிலோமீற்றர் முன்பாக காணப்பட்ட இரு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பதினாறு தொலைத்தொடர்பு கம்பங்களை யானைகள் உடைத்து துவம்சம் பண்ணியுள்ளது.

இந்நிலையில் சேதமடைந்துள்ள மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை நாட்டும் பணியில் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மை காலங்களாக காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதும் , பயிர் நிலங்களை சேதப்படுத்துவதுமான நிலை ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்