தைராய்டு இருந்தா என்ன..? இதை கடைபிடியுங்க இலகுவாக உடல் எடை குறையும்
தைராய்டு என்ற நாள்பட்ட உடல் நல பிரச்சனையானது உடலின் வளர்ச்சியை மாற்றத்தை குறைத்துஇ உடல் எடையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்துவிடும். ஒரு சில சமயங்களில் உடல் எடை அதிகமாக இருப்பதன் காரணமாக கூட தைராய்டு பிரச்சனை ஏற்படலாம். இதன் விளைவாக தைராய்டு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நோயாளிகள் ஆரம்பத்தில் தங்களது உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும்படி ஆலோசிக்கப்படுகிறார்கள் . தைராய்டு பிரச்சனையின் மிகப் பொதுவான அறிகுறிகளில் ஒன்று உடல் எடையில் ஏற்படும் மாற்றம்.
குறைவான தைராய்டு ஹார்மோன் அளவுகளால் ஏற்பட்ட ஹைபோதைராய்டிசம் விளைவாக ஒருவரின் உடல் எடை அதிகரிக்கலாம். மறுபுறம் உடலின் தேவையை காட்டிலும் அதிகப்படியான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி உற்பத்தி செய்யும் பொழுது எதிர்பாராத விதமாக உடல் எடை குறைகிறது. இது ஹைப்பர் தைராய்டிசம் எனப்படுகிறது. சாதாரணமாகவே உடல் எடையை குறைப்பது ஒரு சவாலான பயணமாக இருக்கும் பொழுது, தைராய்டு பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு கூடுதலாக சில முயற்சிகளை எடுக்க வேண்டி இருக்கும். இந்த பதிவில் தைராய்டு பிரச்சனையுடன் இருப்பவர்கள் தங்களது எடையை கவனித்துக் கொள்ள உதவக்கூடிய சில யுக்திகள் பற்றி பார்க்கலாம்.
தனிப்பட்ட உணவு சார்ந்த திட்டம்:
அங்கீகரிக்கப்பட்ட உணவு நிபுணர் ஒருவரை அணுகி உங்களது தைராய்டு பிரச்சனையை கருத்தில் கொண்டு உங்களுக்கான தனிப்பட்ட ஒரு உணவு திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம். இதில் உங்களது வளர்ச்சிதை மாற்றம் மற்றும் உடல் எடை மேலாண்மைக்கான போஷாக்கு தேவை போன்றவற்றின் அடிப்படையில் உணவு அட்டவணை ஒன்றை தயார் செய்து அதனை பின்பற்றலாம்.
மேக்ரோ நியூட்ரியன்ட்களை சமச்சீராக சாப்பிடுதல்:
புரோட்டின், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த ஊட்டச்சத்துக்கள் தைராய்டு செயல்பாடு மற்றும் ஆற்றல் அளவுகளை ஆதரித்துஇ சீரான வளர்ச்சிதை மாற்றம் நடைபெறுவதற்கு உதவி புரியும்.
போதுமான அளவு உடல் செயல்பாடு:
உங்களது சுகாதார நிபுணர் பரிந்துரைத்த ஏரோபிக் பயிற்சிகள் மற்றும் வலிமை பயிற்சிகள் ஆகிய இரண்டையும் மாறி மாறி செய்யுங்கள். இது உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கக்கூடிய சில நன்மைகளை அளிக்கும்.
மன அழுத்தங்களை குறைக்கும் நுட்பங்கள்:
தியானம், ஆழ்ந்த மூச்சு பயிற்சி அல்லது யோகா போன்ற மன அழுத்தத்தை குறைக்க கூடிய சில பயிற்சிகளை செய்வதன் மூலமாக நீங்கள் கார்டிசோல் ஹார்மோன்கள் அளவுகளை பராமரிக்கலாம். மன அழுத்தமானது தைராய்டு செயல்பாட்டை பாதிக்கும் என்பதால் இந்த யுக்தி உங்களுக்கு உதவியாக இருக்கும்.
தைராய்டு பிரச்சனையை தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்றவாறு பராமரிப்பை வழங்குவதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்