தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு: அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கையில் இந்த வருடம் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி ஒதுக்கீட்டிற்குள் அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பான செலவுகளை நிர்வகிப்பது குறித்தும் அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளதாகவும் மாகாண சபை தேர்தலை அடுத்த வருடம் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உரிய தேர்தல் சட்டங்களுக்கான திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்