தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஊடக சந்திப்பு

– கிண்ணியா நிருபர் –

தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஊடக சந்திப்பு நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கிண்ணியா விஷன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது 13வது சீர்திருத்தம் சம்பந்தமான கருத்து தெரிவிக்கையில் “இந்த சட்டம் இன பிரச்சனை தீர்வு தொடர்பில் பார்ப்போமாக இருந்தால் போதிய அளவு சட்டமா இல்லையா என்பது வேறு விடயம்.

இந்த சட்டம் போதாது புதிய சட்டமன்றத்தை ஏற்றுக்கொண்டு புதிய விடயங்களுக்கு செல்லப் போகின்றோம் என்பதை ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியிலே அரசியல் அமைப்பு சபை என்ற ஒரு விடயத்தை கூட்டி அந்த அரசியல் அமைப்பு சபையானது புதிய அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்குவதற்காக சுமார் 80க்கும் அதிகமான தடவை 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரை கூடியிருக்கின்றார்.

 இந்த நாட்டில் உள்ள காணிகளையும் ஏனைய  சொத்துக்களையும் விற்கின்ற செயலில் ரணில்,  ராஜபக்ஷ ஈடுபடுகின்றார். தோல்வி அடைந்தவர்களை மீண்டும் நாம் பங்காளிகளாக இருந்து இடம் கொடுக்கக் கூடாது”  என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்