தேங்காய் பால் நன்மைகள்

தேங்காய் பால் நன்மைகள்

தேங்காய் பால் நன்மைகள்

🔘உலகின் பாதுகாப்பான உணவுகளில் தேங்காய் பாலும் ஒன்று. தேங்காய் பாலில் மாங்கனீஸ் சத்துக்கள், செலினியம், கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இத்தகைய அற்புத குணங்கள் நிறைந்துள்ள தேங்காய் பாலின் நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.

தேங்காய்ப் பாலின் நன்மைகள்

🥥தேங்காய் பாலில் செலினியம் என்று சொல்லக்கூடிய சத்து அதிகமாக உள்ளது. கீல்வாத பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் தினமும் தேங்காய் பாலை குடித்து வர கீல்வாத நோய் விரைவில் குணமாகும்.

🥥தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

🥥தேங்காய் பாலை வெறும் வயிற்றில் குடித்து வர வாய் மற்றும் வயிற்றுப் புண்களை குணப்படுத்தலாம். இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி அல்சர் பண்புகள் புண்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகின்றன.

🥥வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் இரும்பு சத்து கிடைக்கிறது.

🥥மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் உறுப்புகள் சுத்தமாகும்.

🥥வயதின் காரணமாகவும், தசை நரம்புகளுக்கு போதிய சாது கிடைக்க பெறாததனாலும் சிலருக்கு உடலின் பல பகுதிகளில் இருக்கும் தசைகள் நரம்புகள் போன்றவற்றில் இறுக்கம் ஏற்பட்டு மிகுந்த சிரமத்தை தருகிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையாவது தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்ந்து உடலுக்கு பலத்தை தருகிறது.

🥥தேங்காய் பால் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருப்பதன் மூலம் அதிகப்படியான உணவு உட்கொள்ளை கட்டுப்படுத்துகிறது. இதை உங்களுடைய உணவில் சேர்த்து வர உங்களுடைய தினசரி கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்தலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு தேங்காய் பால் சிறந்த பலன்களை கொடுக்கும்.

🥥சிலருக்கு இளம் வயதிலையே தோல் சுருக்கம் அடைந்து பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்க மாட்டார்கள். அதற்கு நீங்கள் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. சரும தோல்கள் சீக்கிரத்தில் சுருக்கம் கொடுக்காமல் இருப்பதற்கு அடிக்கடி தேங்காய் பால் குடித்து வரலாம். தேங்காய் பால் தோலில் உள்ள பளபளப்பு தன்மை அதிகரித்து வயதான காலத்திலும் இளமை தோற்றம் நீடிக்கும்.

🥥தேங்காய் பால் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது.  தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.

🥥தேங்காய் பாலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள், உடலில் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகின்றன. இது இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

🥥பெண்களுக்கு ஏற்படும் பொதுவான சில பிரச்சனைகளில் இரத்த சோகையும் ஒன்று. தேங்காய் பாலில் நிறைந்துள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதைத்தொடர்ந்து உணவில் சேர்த்து வர இரத்த சோகையையும் தடுக்கலாம்.

தேங்காய் பால் நன்மைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்