தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்வ தேர்த்திருவிழா

-யாழ் நிருபர்-

தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்வத்தில் தேர்த்திருவிழா நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

காலை 6.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமான பூசையைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு கொடித்தம்ப பூசையும் , 8மணிக்கு வசந்தமண்டப பூசையும் இடம்பெற்று பஞ்சமுக விநாயகப்பெருமான் உள்வீதி நடன திருவுலாவுடன் தேரிலே ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவமானது இன்று வெள்ளிக்கிழமை மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்