தென்மராட்சி-மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பங்குனித்திங்கள் விரத உற்சவம்

-யாழ் நிருபர்-

இந்துமக்களின் மிகவும் முக்கியமான விரதத்தில் ஒன்றான பங்குனித்திங்கள் விரத உற்சவமாகனது யாழ். மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன் ஆலயங்களில் இடம்பெறுவது வழமை.

அந்தவகையில் இந்த பங்குனித்திங்கள் விரத உற்சவமானது இன்று, வரலாற்று சிறப்பு மிக்க தென்மராட்சி – மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக சிறப்பான இடம்பெற்றது.

கருவறையில் அருள்பாலித்து விளங்கும் பன்றிமுகம் உடைய அம்மனுக்கும் வசந்தமண்டவத்தில் அருள்பாலிக்கும் விநாயகர் முருகன் ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேகம் ஆராதனைகள் என்பன இடம்பெற்றன.

அதன்பின்னர் வசந்தமண்டத்தில் எழுந்தருளியாக இருக்கும் அம்மன் சமேதராக அலங்கரிக்கப்பட்டு உள்வீதி மற்றும் வெளிவீதியூடாக ஐந்துதலைபாம்பு வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இவ் உற்சவ கிரியைகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.விக்கினராஜா குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தி வைத்தனர்.

யாழ். மாவட்டத்தின் பலபாகங்களில் உள்ள பக்தர்கள் வருகைதந்து பன்றித்தலைச்சி அம்மனின் இஷ்ட சித்திகளுடனான அருட்கடாச்சத்தினை பெற்றுச்சென்றனர்.