துவிச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி ஒருவர் பலி

பாணந்துறை – மஹாவில பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அலுபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார் .

உயிரிழந்தவர் ஹொரணை – பாணந்துறை வீதியில் பாணந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று துவிச்சக்கரவண்டியின் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

பின்னர் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்