துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

நுவரெலியா அஹுங்கல்ல பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டுபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் அஹுங்கல்ல பாபா என்ற நதீ அப்ருவின் தந்தையான போகாஹாபிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டின் முன்னறையில் அமர்ந்து இருந்த போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த குறித்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்