திருகோணமலை -சம்பூர் ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் தெய்வத்திருவாசக முற்றோதல்
-மூதூர் நிருபர்-
திருகோணமலை -சம்பூர் ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் கொட்டியாபுரப்பற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றியத்தினரால் சம்பூர் ஆலய பரிபாலன சபையின் ஆதரவுடன் தெய்வத்திருவாசக முற்றோதல்
வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
சம்பூரின் முதுசங்களான சைவப்புலவர் குகராஜா , சைவப்புலவர் வெற்றிவேல் போன்றோருடன் கொட்டியாபுரப்பற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றிய அங்கத்தவர்கள் மற்றும் சம்பூரில் பௌராணிக மரபில் வளர்ந்து வரும் புரண படன ஓதுவார்கள், உரையாளர்கள் என இளையதலைமுறையின் பங்கேற்புடனும் மிகவும் சிறப்புடன் 658 தேனை விஞ்சிய மணிவாசகரின் பாடல்களும் எம்பெருமான் முன்னிலையில் ஓதியருளப்பட்டது.
குறிப்பாக சம்பூரில் பன்னெடுங்காலமாக தொடரப்பெறும் கந்தபுரான கலாசாரத்தைப்போல திருவாசக முற்றோதும் கலாசரமும் திருமந்திர முற்றோதல் கலாசாரமும் பின்பற்றப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்