திணை பயன்கள்

திணை பயன்கள்

திணை பயன்கள்

🟨🟩தினை ஒரு முக்கியமான சிறுதானிய பயிராகும். தினை உலகாதிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது. தினைக்கு ‘சைனீஸ் மில்லட்’‘ஜெர்மன் மில்லட்’‘ஹங்கேரியன் மில்லட்’ என்று பல வகையாக பிரிக்கிறார்கள். தினைக்கு ஆங்கிலத்தில் பாக்ஸ் டெயில் மில்லட் (Fox Tail Millet) என்று பெயர். கதிரோடு இருக்கும் தினையை பார்க்கும்போது அது நரியின் வால் போல் தெரிவதால் ஆங்கிலேயர்கள் அந்த பெயரை வைத்துவிட்டார்கள்.

திணை பயன்கள்

🌾நீரிழவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினை உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோயால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும். மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.

🌾தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தினமும் ஒரு வேளை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும்.

🌾அதிகமான கோபம்கவலை போன்ற உணர்வுகள் நமது உடல் மற்றும் மனதில் சில பாதிப்புகளை உருவாக்கி மன அழுத்தத்ததை உருவாக்குகிறது. தினை தானியத்தில் மன அழுத்ததை குறைக்க கூடிய வேதி பொருட்கள் உள்ளன. எனவே தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது மன அழுத்த பிரச்சனைகளை தீர்க்கும்.

🌾தினையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இது உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.

🌾தினை அரிசியில் கண்களுக்கு நன்மையளிக்கும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனால் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். இதனால் பார்வை தெளிவடையும்.

🌾இன்றைய தலைமுறை ஆண்கள் பலரும் உயிரணு குறைபாடு மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் திணை மாவுடன் சிறிது நெய் சேர்த்து களியாக சாப்பிட்டு வர ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ஆண்மை குறைபாடு நீங்கும்.

🌾பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் கோளாறு காரணமாக அனீமியா போன்ற பிரச்சனைகளால் அவதிப் படுபவர்கள் திணை மாவுடன் கருப்பட்டி சேர்த்து உருண்டைகளாக தினமும் சாப்பிட்டு வர கருப்பை பலப்பட்டு கருப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும்  குணமாகும்.

🌾அல்சைமர் நோய் என்பது ஒரு வகையான தீவிரமான ஞாபக மறதி நோயாகும். இந்நோய் வந்தவர்கள் பல சமயங்களில் தங்களையே மறந்து விடும் நிலைக்கு சென்று விடுவர். தினை மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்துஇ ஞாபகத்திறனை மேம்படுத்தும் சக்தியை அதிகம் கொண்டிருப்பதால்இ அதை சாப்பிட்டு வருபவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவாக இருக்கும்.

🌾உடலின் உஷ்ணம் தட்ப வெப்ப மாறுபாடுகளால் அதிகரிப்பதாலும், நோய் தொற்றுகளாலும் காய்ச்சல் போன்ற நோய்கள் உடலை மிகவும் பலவீன படுத்தும் காலரா போன்ற நோய்களும் உண்டாகின்றன. காய்ச்சல், காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினை கஞ்சி, களி போன்ற்வவற்றை கொடுத்து வருவது சிறந்த உணவாக இருக்கும்.

🌾தினை புரதம் சத்துக்கள் அதிகம் கொண்டது அதே நேரத்தில்இ கொழுப்பு சத்து அறவே இல்லாத சில வகை உணவுகளில் இதுவும் ஒன்றாகும். தினையை அடிக்கடி சாப்பிட்டு வர உடலின் கொழுப்பு அளவை சமநிலையில் வைக்கும். தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகம் கூடாமல் தடுத்துஇ உடல் நலத்தை காக்கும்.

திணை பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்