தாயுடன் வீதியில் நடந்து வந்த சிறுமி உயிரிழப்பு

மரக்கிழளை ஒன்று முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பின்னவல – நெல்லிவல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள முன்பள்ளியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒத்திகைகளில் கலந்து கொண்டு விட்டு, தனது தாயுடன் நடந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே குறித்த சிறுமி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்திலிருந்து சிறுமி மீட்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துவிட்டார், என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.