தலையில் நீர் கட்டி அறிகுறிகள்

தலையில் நீர் கட்டி அறிகுறிகள்

தலையில் நீர் கட்டி அறிகுறிகள்

⭕மூளையில் செல்களின் அசாதாரணமான வளர்ச்சி மூளைக்கட்டி என்று வழங்கப்படுகிறது. இதனை முதல்நிலை மூளைக்கட்டி மற்றும் இரண்டாம் நிலை மூளைக்கட்டி என்று வகைப்படுத்தலாம். முதல் நிலை மூளைக்கட்டி புற்று அல்லாத தணிந்த நிலை மூளைக்கட்டியாகும் அல்லது புற்றுநோய் மூளைக்கட்டியாகும்.  இரண்டாம் நிலை மூளைக்கட்டிஇ உடலின் வேறு பகுதியில் உருவான கேன்சர் மூளைக்கும் பரவி கட்டி ஏற்படுதல் என்பதாகும்.

மூளை கட்டி அறிகுறிகள்

🧠மூளையில் கட்டி ஏற்பட்டால் பார்வை குறைவு ஏற்படும். கண்கள் மங்களாக தெரியும். கண்களில் வலி ஏற்படும் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட்டால் மூளையில் கட்டி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

🧠ஒரு சிலருக்கு தொடர்ச்சியான தலைவலி ஏற்படும். சிலருக்கு ஒற்றை தலை வலி, சிலருக்கு தலை பாரம், நீர் கோர்த்தல்  போன்று இல்லாமல் தினமும் தலை வலி ஏற்பட்டு வலி மிகவும் அதிகமாக இருந்தால் மூளையில் கட்டி இருப்பதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

🧠மூளையில் உள்ள கட்டி மனிதனின் அடிப்படை வழக்கத்தை கூட மறக்கவைக்கும் அளவிற்கு பாதிக்கும். அன்றாட வாழ்வில் என்ன செய்வோம் என்பதை மறக்க வைக்கும். மனதில் எந்த விஷயத்தையும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. அதிக மறதி ஏற்படும். இதையெல்லாம் மூளையில் கட்டி இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

🧠குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் எளிய இரைப்பைக் கோளாறுக்கான அறிகுறியாக இருக்கலாம். ஆனால் அது இயற்கையில் தொடர்ந்து இருந்தாலோ அல்லது வாந்தியுடன் தொடர்புடையதாக இருந்தால்இ அது அடிப்படை மூளைப் பிரச்சனையைக் குறிக்கலாம்.

🧠நல்ல உடல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சிறிது காலம் முடிந்த பிறகு அந்த சுறுசுறுப்பு இருக்காது. மூலையில் கட்டி ஏற்பட்டால் அது உடலில் உள்ள சத்துக்களை சுழற்சி செய்வதை நிறுத்தி உடல் பலவீனம் ஆக்கும். அதிகமாக சோம்பேறியாக இருப்பீர்கள் இதுவே மூளையில் கட்டி ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.

🧠மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது கண், காது தான். கண் காதுக்கு வரும் நரம்பு தான் முதலில் பாதிப்பு அடைந்து கடைசியில்  கண் பாதிப்பையும், காது பாதிப்பையும் ஏற்படுத்தும்.

🧠மூளைக்கட்டியானது நியூரான்களை கட்டுப்பாடில்லாமல் எரியச் செய்து அசாதாரண உடல் இயக்கங்களுக்கு வழிவகுக்கும். இதனால்இ வலிப்பு உடலின் ஒரு பகுதியை உள்ளடக்கிய குவியமாக இருக்கலாம் அல்லது முழு உடலையும் உள்ளடக்கியதாக இருக்கலாம். கட்டியானது மூளையின் பாரிட்டல் லோயை உள்ளடக்கிய நிகழ்கிறது. இது உடலின் மோட்டார் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது.

தலையில் நீர் கட்டி அறிகுறிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்