தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தாலிப் அலி தெரிவு

 

தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம் பெற்ற குறித்த தவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எட்டு வாக்குகளால் எச்.தாலிப் அலி திறந்த வாக்கெடுப்பு மூலமாக தவிசாளராக தெரிவானார்.

மொத்தமாக 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களில் தேசிய மக்கள் சக்தி சார்பில் 3 ,ஐக்கிய மக்கள் சக்தி 3,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2,இலங்கை தமிழரசு கட்சி 2,ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 2,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ,பொதுஜன ஐக்கிய முண்ணனி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனி தலா ஒருவரும் அடங்குவர்.

மூவின சமூகங்களை சேர்ந்தவர்கள் இச் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

தவிசாளர் தெரிவில் மூவர் போட்டியிட்டனர் இதில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சார்பில் எச்.தாலிப் அலியும்,ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் எஸ்.எம்.சுபியான் மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பில் நஜிபுள்ளாவும் போட்டியிட்டனர் இதில் திறந்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி சபையை கைப்பற்றியது

குறித்த சபையில் உப தவிசாளராக விஜயானந்தம் விஜய குமார் திறந்த வாக்கெடுப்பு மூலமாக தெரிவு செய்யப்பட்டார்.