தந்தை திட்டியதால் அமிலம் குடித்து உயிரை மாய்த்த மாணவி

தமிழகத்தின் திருவாரூர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் அமிலம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவாரூர் மாவட்டம் வடபாதியைச் சேர்ந்தவரான 12 ஆம் வகுப்பு படிக்கும் பாடசாலை மாணவி பிரியதர்ஷினி (16) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொதுத் தேர்வுக்கு படிக்காமல் நீண்ட நேரம் கைபேசி பயன்படுத்துவதை அவரது தந்தை கண்டித்துள்ளார்.

இதனால் பிரியதர்ஷினி சோகமாக இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து அமிலத்தை குடித்துள்ளார்.

அச்சமயம் பிரியதர்ஷினியின் பெற்றோர் வெளியூருக்கு சென்றிருக்கின்றனர். அதனால் உறவினர்கள் பிரியதர்ஷினியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்