தந்தையால் துப்பாக்கிச் சூடு: மகன் படுகாயம்

அம்பாந்தோட்டை சூரியவெவ – வெவேகம பிரதேசத்தில் தந்தையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாகப் போதையிலிருந்த தந்தை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை தப்பிச் சென்றுள்ளதுடன், மகனின் இடது கால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்