தக்காளி பயன்கள்

தக்காளி பயன்கள்

தக்காளி பயன்கள்

🟢🔴நம் அன்றாட சமையலில் தக்காளியை ஒரு பொருளாகஇ உணவின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கிறோம். ஆனால் அந்த தக்காளியில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றது. சில சமயங்களில் விலை கூடினால் கூட அதை அவசியமாக வாங்கிவந்து சமையலுக்கு சேர்த்துக் கொள்வோம். சமையலுக்கு ருசியை கொடுக்க அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தக்காளி. சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்காகவும் தான். அந்தவகையில் தக்காளியின் பயன்களைப் பார்ப்போம்.

🍅தக்காளியில் உள்ள குரோமியம் அதிகமாக உள்ளதால் இது நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

🍅தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ சத்தானது கண் பார்வையை மேம்படுத்துகிறது. மாலைக்கண் வியாதி வராமல் தடுக்கிறது. குணப்படுத்தவே முடியாத கோளாறாக இருக்கும் மாகுலர் டி-ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை இந்த தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் தடுக்கலாம்.

🍅தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ சத்தானது கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது. தக்காளி சாப்பிடுவதால் நம் கூந்தலானது வளர்ச்சியடையாது. ஆனாலும் நமக்கு இருக்கும் கூந்தலானது அழகாக  மாறும்.

🍅தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. இது நம் சருமத்தை சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும். நம் சருமமானது சுருக்கத்தில் இருந்து நீங்கவும், எண்ணெய் வழியாமல் இருக்கவும் தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும்.

🍅வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்தானது தக்காளி பழத்தில் அதிக அளவில் உள்ளது. இதை தினந்தோறும் நாம் சாப்பிட்டு வருவதன் மூலம் நம் எலும்புகள் உறுதியாக்கப்படுகின்றன. மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் குறையும்.

🍅தக்காளிக்கு இயற்கையாகவே புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி உள்ளது. நம் உடம்பில் உள்ள அணுக்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தக்காளியில் அதிக அளவு உள்ளது. இதனால் கர்ப்பப்பை புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வாய் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

🍅தக்காளியை சிறுநீர் கற்கள், பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் அதன் விதையுடன் சாப்பிடக்கூடாது. விதையை நீக்கிவிட்டு தான் சாப்பிட வேண்டும். விதை இல்லாமல் சாப்பிடும் தக்காளியின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும், பித்தப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கலாம்.

🍅தக்காளியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தானது அதிக அளவில் உள்ளது. இதனால் நம் உடல் எடையை குறைக்க இது உதவியாக உள்ளது. தக்காளி கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள பொருளாகவும் இருக்கிறது. இதனால் எடையை குறைக்க டயட்டில் உள்ளவர்கள் தினந்தோறும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிப்பது மிகவும் சிறந்தது.

🍅சிலருக்கு முதுகு எலும்பும், தோள்பட்டை களிலும் கடுமையான வலி ஏற்படும். இப்படிப்பட்ட வழியினை நீக்க தக்காளி ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பயோஃபிளேவோனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் வலி ஏற்படாமல் தடுக்கின்றது.

தக்காளி பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்