டிக் டொக் செயலிக்கு 75 நாட்கள் கால அவகாசம்: ட்ரம்ப்

டிக் டொக் எனப்படும் கையடக்க தொலைபேசி செயலி உலகளவில் மிகவும் பிரபலமான செயலியாகும்.

அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தச் செயலிக்கு முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தடை விதித்திருந்தார்.

பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக் டொக்கிற்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், டிக் டொக் செயலிக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 75 நாட்களுக்கு நீடிப்பு செய்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க