டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர்: உயர் நீதிமன்றம்

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று புதன் கிழமை தீர்ப்பளித்துள்ளது.

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய குடியுரிமையை கொண்டவர் எனவும், இதனால் அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு தகுதியற்றவர் எனவும் உத்தரவிடக்கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்