ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம்: பொலிசார் குவிப்பு

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிராக பிரஜா சக்தி அமைப்பினால் இன்று  புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதையடுத்து பெருமளவிலான கலகத்தடுப்பு பொலிசார் குவிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரத்தை மீள வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டம் தொடங்கிய உடனேயே ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பொலிசார் பதாதைகளை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டதுடன், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில முனசிங்கவிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்