சென்னை சுப்பர் கிங்ஸ் 28 ஓட்டங்களால் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட தொடரின் இன்றைய நாளுக்கான முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்நிலையில்,168 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்