சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் மரணம்

மஹரகம பகுதியில் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஊழியர்கள் மீது கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

ஹைலெவல் வீதிக்கு அருகில் உள்ள கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடபட்டு கொண்டிருந்தவர்கள் மீதே சுவர் விழுந்து காயமடைந்த ஊழியர்கள் இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மற்றைய நபர் களுபோவில வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்