சீரற்ற வானிலை காரணமாக சீனாவில் 33 பேர் பலி

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்