சீனாவில் நிலச்சரிவு : பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணம், மெய்ஷூ நகருக்கு அருகேயுள்ள நெடுஞ்சாலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீதியில் சென்று கொண்டிருந்த 20 வாகனங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் நேற்று முன்தினம் புதன் கிழமை 24 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நிலச்சரிவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தற்போது 48ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்