சில்வர் டிப்ஸ் தேயிலையை குடிசைத் தொழிலாக்கும் வேலைத்திட்டம் நாளை

தென் மாகாணத்தில் விலை உயர்ந்த தேயிலை வகையான சில்வர் டிப்ஸை குடிசைத் தொழிலாக பிரபலப்படுத்தும் வேலைத்திட்டம் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

300 குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு 20 முதல் 43 தேயிலை வகைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த வகை தேயிலை ஒரு கிலோகிராம் ஒரு இலட்சம் முதல் ஒன்றரை இலட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்