சித்திரைப் புத்தாண்டு விற்பனை கண்காட்சி

கிரான் நிருபர்

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் விற்பனைக் கண்காட்சி நடைபெற்றது.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சமுர்த்தி விற்பனைக் கண்காட்சியானது பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் எஸ்.மனோகிதராஜ் மற்றும் பிரதேச செயலாளர் விற்பனைக் கண்காட்சியினை திறந்து வைத்தனர்.

உள்ளுர் உற்பத்தியினை மேம்படுத்தி உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுத்து இ அவற்றை விளம்பரப்படுத்தும் நோக்கிலும் இந்த விற்பனைக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் எஸ்.மனோகிதராஜ் மற்றும் கோறளைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர், சமுர்த்தி தலமை முகாமையாளர் ஏனைய உத்தியோகத்தர்கள், விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்